நாய்கள் கடித்து 7 ஆடுகள் செத்தது
வெள்ளகோவில் அருகே நாய்கள் கடித்து 7 ஆடுகள் செத்தன.
7 ஆடுகள் செத்தன
வெள்ளகோவில் 19-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் நளினி கார்த்திகேயன். இவர் தனது தோட்டத்தில் 40 ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து இருந்தார். பின்னர் நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்று பார்த்தார்.
அப்போது 2 பெரிய ஆடுகள், 5 குட்டி ஆடுகள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தன. 3 ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடியது.
நள்ளிரவுநேரம் பட்டிக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 2 பெரியஆடுகள், 5 குட்டி ஆடுகள் செத்து விட்டன. இதுகுறித்து கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பட்டிக்கு வந்து பார்வையிட்டனர்.
இழப்பீடு
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஆடு வளர்க்கும் விவாயிகள் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு நாளுக்கு நாள்பல்வேறு தொல்லைகள் அதிகரிக்கிறது. பயிர்களை மயில்கள், மான்கள் ஒரு பக்கம் சேதம் ஏற்படுத்தினாலும், தோட்டத்தில் வளர்க்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்று வருகிறது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும் நிலையில், வாழ்வாதாரமாக விளக்கும் ஆடுகளை நாய்கள் கடித்து கொல்வது கலவை அளிக்கிறது. எனவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்கள் கடித்து சாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.