பொம்மிடி சந்தையில் ரூ.36 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
பொம்மிடி சந்தையில் ரூ.36 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வடசந்தையூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பிற மாவட்ட வியாபாரிகளும், உள்ளூர் விவசாயிகள், 500-க்கும் மேற்பட்டோர் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். 5 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரம் முதல் எடைக்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரையில் விற்பனை ஆனது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ.36 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story