பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் ஆடு மற்றும் கோழிச்சந்தை நேற்று கூடியது. வருகிற 10-ந்தேதி, பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அய்யலூர் சந்தை நேற்று களை கட்டியது. அதிகாலை முதற்கொண்டே ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது.

போட்டி போட்டு ஆடுகளையும், சேவல்களையும் வியாபாரிகள் வாங்கி தங்களது வாகனங்களில் ஏற்றி சென்றனர். திடகாத்திரமான ஆட்டு கிடாய்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை மும்முரமாக நடந்தது. சுமார் ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது என்றனர்.


Next Story