ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை


ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

திருநெல்வேலி

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.1¼ கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கால்நடை சந்தை

நெல்லை மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெறுகிறது. இதில் ஆடு, கோழி, கருவாடு உள்ளிட்டவற்றை வியாபாரிகள், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். முக்கிய விழா காலங்களில் ஆடுகளின் விலை அதிகமாக இருக்கும்.

தற்போது மார்கழி மாதம் என்பதால் பலர் அய்யப்பன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஓம் சக்தி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர். இதனால் கடந்த சில வாரங்களாக ஆடுகளின் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இந்த நிலையில் வருகிற 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று மேலப்பாளையம் சந்தைக்கு நெல்லை மாவட்டம் மற்றும் தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதை வாங்குவதற்காக வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தையில் குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். இதனால் ஆடுகளின் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

ரூ.1¼ கோடி

இந்த வாரம் புதுவரவாக கராச்சி வகை ஆடுகள் விற்பனைக்கு அதிக அளவில் வந்தது. அதையும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

நேற்று மட்டும் மேலப்பாளையம் சந்தையில் ரூ.1 கோடியே 27 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story