வயலில் புதைந்திருந்த சிலை கண்டெடுப்பு


வயலில் புதைந்திருந்த சிலை கண்டெடுப்பு
x

திருச்சேறை அருகே வயலில் புதைந்திருந்த சிலை கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான வயலை அதே பகுதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முரளி என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நேற்று இவர் வயலில் தண்ணீர் வருவதற்காக தூர் வாரும்போது வயலில் புைதந்திருந்த 3 அடி உயரமுள்ள மகாலட்சுமி கருங்கல் சிலை கிடைத்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். பின்னர் இந்த சிலை கும்பகோணம் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story