51 விநாயகர் சிலைகள் ஊர்வலம்


51 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

பட்டுக்கோட்டையில், 51 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நசுவினி ஆற்று தடுப்பணையில் கரைக்கப்பட்டது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டையில், 51 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நசுவினி ஆற்று தடுப்பணையில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சிப் பாசறை சார்பில் பட்டுக்கோட்டை நகரில் உள்ள 33 வார்டுகளிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 51 விநாயகர் சிலைகள் கடந்த ஒரு வாரமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தது.விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்ததை தொடந்து பட்டுக்கோட்டை விசுவநாதர் கோவில் முன்பு பட்டுக்கோட்டை நகரில் அமைக்கப்பட்டிருந்த 51 சிலைகளும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

தடுப்பணையில் கரைப்பு

தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சிப் பாசறை மாநில சட்ட ஆலோசகர் மணிகண்டன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாக் குழு தலைவர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநில அமைப்புச் செயலாளர் மோகன கார்த்திகேயன், மாநில தலைவர் ஆதிமதனகோபால், சிவசேனா மாநில துணைத்தலைவர் சி.பி.போஸ், நகர வர்த்தக சங்க செயலாளர் விஜயரெங்கன், விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆதிராஜாராம் உள்பட ஏராளமானோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளுடன் 51 சிலைகளும் 21 வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் சென்று இரவு 8.45 மணிக்கு வெண்டாக்கோட்டை நசுவினி ஆறு தடுப்பணையில் கரைக்கப்பட்டது.இதனையொட்டி பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அய்யம்பேட்டை

அய்யம்பேட்டை பகுதியில் 14 விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அய்யம்பேட்டை பகுதியில்14 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அய்யம்பேட்டை, பசுபதிகோவில், மாகாளிபுரம், வழுத்தூர், கோபாலபுரம் உள்ளிட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு மேள தாளங்கள், வாண வெடிகள் முழங்க அர்தந்த பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் குடமுருட்டி ஆற்றில் கரைக்கப்பட்டன.


Next Story