தேவி பத்திரகாளி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா
உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவில் புரட்டாசி திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருநாளான 16-ந் தேதி இரவு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வந்தார். இரவு அன்னதானம் நடந்தது. 22-ந் தேதி இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 23-ந் தேதி இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையை தொடர்ந்து அம்மன், பவளமுத்து விநாயகர் முக்கிய வீதியுலா நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா பெ.சுந்தர ஈசன் மற்றும் விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story