வேனில் கல்லூரிக்கு செல்லும்மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல்
தட்டார்மடம் அருகே வேனில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே அரசு கல்லூரிக்கு வேனில் செல்லும் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த 2 வாலிபர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் ெசய்தனர்.
வேனில் கல்லூரிக்கு...
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு தட்டார்மடம், முதலூர், மணிநகர், படுக்கப்பத்து உள்ளிட்ட பகுதியில் உள்ள மாணவிகளை தட்டார்மடத்தைச் சேர்ந்த செல்வரஜ் என்பவரது வேனில் மாணவிகள் காலையில் ெசல்வர். பின்னர் மாலையில் கல்லூரி முடிந்து அந்த வேனில் ஊருக்கு செல்வது வழக்கம்.
மாணவிகளுக்கு தொல்லை
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தட்டார்மடம் அருகே முதலூர் பகுதியில் கல்லூரி மாணவிகளை ஏற்றிய வேன் வரும்போது அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்துள்ளனர். அதாவது மாணவிகளை ஏற்றி செல்லும் வேனை மறித்து ரேஸ்சில் செல்வது போல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று மாணவிகளை அச்சுறுத்தி வந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
இதையடுத்து வேன் டிரைவர் செல்வராஜ் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் விசாரணை நடத்தியதில் அந்தவாலிபர்கள் அன்பின்நகரம், அடைக்கலாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அவர்களுடைய 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.