தியாகதுருகம் அருகே கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தியாகதுருகம் அருகே கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

தியாகதுருகம் அருகே கோலத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் உள்ள கோலத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 16-ந்தேதி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, தீர்த்த குடம் எடுத்தலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கோ பூஜை, சூரிய நாராயண பூஜை நிறைவடைந்தது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோலத்தி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் கோலத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதேபோல் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், கருப்பையா, சன்னியாசியப்பர் ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஈய்யனூர், மகரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story