வாலிபரை கத்தியால் குத்தி செல்போன், பணம் பறிப்பு


வாலிபரை கத்தியால் குத்தி செல்போன், பணம் பறிப்பு
x

வாலிபரை கத்தியால் குத்தி செல்போன், பணம் பறிப்பு

திருப்பூர்

மங்கலம்

மங்கலம் அருகே ஓரின சேர்க்கைக்கு அழைத்து வாலிபரை கத்தியால் குத்தி செல்போன், பணம் பறித்த சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓரின சேர்க்கைக்கு அழைப்பு

திருப்பூர் இடுவாய் அருகே பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 34). பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அந்த செயலி மூலம் சுரேஷ்குமாருக்கு சந்தோஷ்குமார் என்பவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார். அப்போது சுரேஷ்குமாரிடம் நைசாக பேசி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட ஆசை உள்ளதா என்று சந்தோஷ்குமார் கேட்டுள்ளார்.

இதையடுத்து சுரேஷ்குமாரை இடுவாய் பாரதிபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி இருவரும் பாரதிபுரம் காட்டுப்பகுதியில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திடீரென்று வந்த 4 பேர் சந்தோஷ்குமாருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை தாக்கி, கத்தியால் குத்தியுள்ளனர். பின்னர் செல்போன் மற்றும் பணம், வெள்ளிமோதிரம், வெள்ளி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதுதொடர்பாக மங்கலம் போலீசில் சுரேஷ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

5 பேர் கைது

இதில், செல்போன் மற்றும் நகையை பறித்துச் சென்றது திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த மற்றொரு சுரேஷ்குமார் (21), சந்தோஷ்குமார் (19), அவினாசியை சேர்ந்த மணிகண்டன்(19), சாமுண்டிபுரத்தை சேர்ந்த சந்திரபோஸ் (23) மற்றும் 14 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story