வீட்டின் வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

வீட்டின் வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
x

மயிலாடுதுறையில் வீட்டின் வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்கச்சங்கிலியை முகமூடி அணிந்து வந்த 3 பேர் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் வீட்டின் வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் தங்கச்சங்கிலியை முகமூடி அணிந்து வந்த 3 பேர் பறித்துச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நடைபயிற்சி

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் அருகே உள்ள வைரம் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 70). இவரது மனைவி லதா (56). இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டின் வளாகத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வீட்டின் கொல்லைப்புறம் வழியாக காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து லதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லதா, தங்கச்சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டார்.

தங்கச்சங்கிலி பறிப்பு

இருந்தாலும் லதா கழுத்தில் அணிந்திருந்த பாதியளவு தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். மர்ம நபர்கள் கையில் சுமார் 2½ பவுன் சங்கிலி சிக்கிக் கொண்டது.இதுகுறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு லதா தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து பாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்கள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story