பெண்ணிடம் 6½ பவுன் தாலிக்கொடி கொள்ளை


பெண்ணிடம் 6½ பவுன் தாலிக்கொடி கொள்ளை
x

பெண்ணிடம் 6½ பவுன் தாலிக்கொடி கொள்ளை

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி அணிந்த 3 ஆசாமிகள் பெண் அணிந்து இருந்த 6½ பவுன் தாலிக்கொடியை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மளிகை கடை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ராம்நகரை சேர்ந்தவர் பெரியதிருவடி (வயது 40). அதே அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியதிருவடி, இவருடைய மனைவி நந்தினி (26), மகன் விஷ்ணுராம் (4) ஆகிய 3 பேரும் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நந்தினி கழுத்தில் அணிந்து இருந்த 6½ பவுன் தாலிக்ெகாடியை யாரோ பிடித்து இழுப்பது போன்று உணர்ந்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்து நந்தினி பார்த்த போது முகமூடி அணிந்த மர்ம ஆசாமி ஒருவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.

அதன்பின்னர் தம்பதி இருவரும் மின்விளக்கை போட்டு விட்டு வௌியே வந்து பார்த்தபோது மற்றொரு அறையில் துணிகள் சிதறிக்கிடந்தன. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஆசாமி, முதல் அறையில் பணம், நகை ஏதும் உள்ளதா? என்று தேடி பார்த்துள்ளான். அங்கு எதுவும் இல்லாததால் பக்கத்து அறையில் நுழைந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த நந்தினி அணிந்து இருந்த 6½ பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றது தெரியவந்தது.

3 ஆசாமிகள் கைவரிசை

இதுகுறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராசு, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் உருவம் அங்குள்ள கண்கணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாலை 2.30 மணிக்கு முகத்தை மறைத்து முழங்கால்வரை மூடிய நிலையில் 3 ஆசாமிகள், கையில் உறை அணிந்து தெருவில் நடந்து வருவதும், அவர்கள் பெரியதிருவடியின் பக்கத்து வீடான குழந்தைவேல் என்பவர் வாடகைக்கு விட்டிருந்த பகுதியின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயல்வதும் அங்கு ஒன்றும் இல்லாததால் திரும்பி பெரியதிருவடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைவதும் பதிவாகி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story