தம்மம்பட்டி அருகே துணிகரம்:மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


தம்மம்பட்டி அருகே துணிகரம்:மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார்.

சேலம்

தம்மம்பட்டி:

மளிகை கடையில் பெண்

தம்மம்பட்டி அருகே நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தம்மம்பட்டி அருகே கெங்கவல்லி செல்லும் ரோட்டில் மூலப்புதூர் பிரிவில் செந்தில் என்பவரது மளிகை கடை உள்ளது. இந்த கடையில் செந்திலின் மனைவி மட்டும் இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், பொருட்கள் வாங்குவது போல் ரம்யாவிடம் நைசாக பேச்சு கொடுத்தார். ரம்யாவும் அந்த நபர் கேட்ட பொருட்களின் விலை குறித்து கூறிக்கொண்டே இருந்தார்.

தங்க சங்கிலி பறிப்பு

அப்போது அந்த நபர் திடீரென ரம்யா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்தார். ரம்யா உடனே தங்க சங்கிலியை பிடித்துக்கொண்டு திருடன், திருடன் என சத்தம் போட்டார். அந்த நபர், தனது கையில் கிடைத்த தாலி சங்கிலியுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்மநபர் பறித்து சென்ற தங்க சங்கிலி 1½ பவுன் என்று கூறப்படுகிறது.


Next Story