மேல்மலையனூர் கோவிலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
மேல்மலையனூர் கோவிலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்
மேல்மலையனூர்,
கர்நாடக மாநிலம் கீழ்பெல்லா மாவட்டம் குவண பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் மனைவி தேவம்மாள் (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூாில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். கோவிலில் உள்ள கயிறு கட்டும் இடத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மநபர் ஒருவர் தேவம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story