துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாமா(வயது 50). இவர் நேற்று அழகாபுரி கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து அழகாபுரி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மர்ம நபர், பாமாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக பாமா வி.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story