நர்சிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வக்கீல் கைது


நர்சிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வக்கீல் கைது
x

துவரங்குறிச்சி அருகே நர்சிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

துவரங்குறிச்சி அருகே நர்சிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

நர்சிடம் சங்கிலி பறிப்பு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த செவல்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த மே மாதம் பணியில் இருந்த நர்ஸ் நந்தினி என்பவரிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 6 ¼ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தெத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த சின்னு (வயது 30) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நந்தினியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதிக செலவு

சின்னுவின் மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்று அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதால் அவருக்கு அதிக செலவு ஏற்பட்டது. சிகிச்சை முடித்த பின் மீண்டும் செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சின்னு பணியில் இருந்த நந்தினியிடம் உங்களால் தான் அதிக செலவு செய்ய வேண்டியது ஆகிவிட்டது, உன்னை எப்படி பார்க்க வேண்டுமோ பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

வக்கீல் கைது

இதனிடையே திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த விஜய் (25), ஹரி பிரசாத் (20) ஆகியோருடன் சின்னுக்கு பழக்கம் ஏற்பட்டது. சின்னு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்ததை எடுத்து கூறியுள்ளார். பின்னர் சின்னுவின் தூண்டுதலின் பேரில் ஹரி பிரசாத், விஜய் ஆகியோர் பள்ளப்பட்டியில் ஒரு மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து நந்தினியிடம் 6 ¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சின்னுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5½ பவுன் உருக்கப்பட்ட தங்கம், ஒரு மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ஹரி பிரசாத், விஜய் ஆகிய இருவரும் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் உள்ளனர். சின்னு சட்டப் படிப்பு முடித்துள்ளார். இன்னும் பார் கவுன்சிலில் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.


Next Story