பெண்ணை மிரட்டி 4 பவுன் நகை- மடிக்கணினி திருட்டு


பெண்ணை மிரட்டி 4  பவுன் நகை- மடிக்கணினி திருட்டு
x

தஞ்சையில், வீடுபுகுந்து பெண்ணை மிரட்டி 4 பவுன் நகை- மடிக்கணினியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மோத்திரப்பாசாவடி பகுதியை சேர்ந்த பாலாஜி மனைவி வேம்புலதா (வயது48). இவர் ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனைசெய்து வருகிறார். சம்பவத்தன்று பாலாஜி வெளியே சென்ற பின்னர், வீட்டிற்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் வேம்புலதாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது வீட்டில் வேம்புலதா மட்டும் இருப்பதை அறிந்த அந்த நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 பவுன் சங்கிலி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை திருடி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் வேம்புலதா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் (29), டக்லஸ் மணி என்ற மணிகண்டன் (32), மூட்ட மணி என்ற மணிகண்டன் (35) ஆகியோர் தங்க சங்கிலி, மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை திருடி சென்றதும் தெரியவந்தது. அவர்கள் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story