சென்னை விமான நிலையத்தில் 17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தகடு பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தகடு பறிமுதல்
x

டி.வி.டி பிளேயருக்குள் 17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தகடு மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை செய்தனர்.

அப்பொழுது அவர் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசினார். இதையடுத்து அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் இருந்தது. அதோடு அதில் ஒரு டி.வி.டி பிளேயருக்குள் 17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தகடு மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் அவர் 3.15 லட்சம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் மின்னணு சாதனங்களை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story