கருணாநிதி பிறந்த நாளன்று பிறந்த 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


கருணாநிதி பிறந்த நாளன்று பிறந்த 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x

கருணாநிதி பிறந்த நாளன்று பிறந்த 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர் எ.வ.வேலு அணிவித்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதியன்று பிறந்த 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. , தி.மு.க. மருத்துவரணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி கோல்டு எஸ்.பிரபு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு கலந்துகொண்டு, 38 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்து புத்தாடை, ரொட்டி, பழங்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தி.மு.க. சார்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தங்க மோதிரம் அணிவித்தவுடன் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இது விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அரசு. இது மக்களுக்கான அரசு. மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை செய்கிற அரசு. இந்த ஆட்சி தொடர்ந்து 25 ஆண்டு காலம் நீடிக்கும். அதே போன்று மக்கள் சேவைகள் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால்பாபு, மருத்துவ கண்காணிப்பாளர் ஷகில்அகமர், துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர், தி.மு.க. மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமணன், நகர நிர்வாகிகள் துரை.வெங்கட், இல.குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story