தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி. மாநில அமைப்பு செயலாளருமான கே.பெருமாள்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநகர செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story