2 பவுன் நகை திருட்டு


2 பவுன் நகை திருட்டு
x

திருவோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

திருவோணத்தை அடுத்துள்ள நம்பிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது59). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் பரமசிவம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகையை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


Next Story