அவினாசி அருகே வீட்டில் தனியாக இருந்த கலெக்டரின் பெற்றோரை தாக்கி 7 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
அவினாசி அருகே வீட்டில் தனியாக இருந்த கலெக்டரின் பெற்றோரை தாக்கி 7 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சேவூர்
அவினாசி அருகே வீட்டில் தனியாக இருந்த கலெக்டரின் பெற்றோரை தாக்கி 7 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கலெக்டரின் பெற்றோர் வீடு
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே மங்கரசுவளையபாளையம் ஊராட்சி லூர்துபுரம் பிள்ளையார் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 86). இவரது மனைவி சரஸ்வதி (78).
இவர்களுக்கு ரமேஷ் குமார் என்ற மகனும், ராதாலட்சுமி, சாந்தி என 2 மகள்களும் உள்ளனர். இதில் ரமேஷ் குமார் அவினாசியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். மூத்த மகள் ராதாலட்சுமி கோவை மாவட்டம் துடியலூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இளைய மகள் சாந்தி தர்மபுரி மாவட்ட கலெக்டராக உள்ளார்.
கொள்ளை
கலெக்டர் சாந்தியின் தாய்-தந்தை இருவரும் லூர்துபுரத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை இவர்களது வீட்டிற்குள் 2 ஆசாமிகள் புகுந்தனர்.
அவர்கள் திடீரென்று கிருஷ்ணசாமியை இரும்பு திருப்புளியால் தாக்கி வீட்டிலிருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலெக்டரின் தந்தைையயே தாக்கி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.