பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
திருப்பூர்


பல்லடம் பனப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஆனந்தபாரதி. இவருடைய மனைவி பேபி ராதா(வயது 43). இருவரும் நேற்று முன்தினம் இரவு பல்லடம் - திருப்பூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி எதிரே நடைபயிற்சி சென்றுவிட்டு அருகே உள்ள வீட்டிற்கு திரும்புவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பேபி ராதா அருகே வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து பேபி ராதா பல்லடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story