மூதாட்டியிடம் நகைபறித்த 2 பேர் கைது


மூதாட்டியிடம் நகைபறித்த 2 பேர் கைது
x
திருப்பூர்


அவினாசி கொடி காத்த குமரன் நகரில் வசிப்பவர் சகுந்தலா (வயது67).இவர் கடந்த 17-ந்தேதி அவினாசி மங்கலம் ரோடுபவர்ஹவுஸ் அருகே நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் சகுந்தலா அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அவினாசி புதுபஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் சிங்காநல்லூரைச்சேர்ந்த சரவணன் (32), மற்றும் அன்னூர் ஓதிமலை ரோட்டை சேர்ந்த கண்ணன் (20) என்பதும் அவர்கள் மூதாட்டியின் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்து. அவர்களிடமிருந்த 7 பவுன் சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story