மூதாட்டியிடம் 7½ பவுன் நகை பறிப்பு


மூதாட்டியிடம் 7½ பவுன் நகை பறிப்பு
x
திருப்பூர்


பல்லடம் மங்கலம் ரோடு இளங்கோ வீதியை சேர்ந்த கோபால் மனைவி கீதா (வயது60). இவர் நேற்று பி.டி.ஒ.காலனியில் உள்ள ராஜவிநாயகர் கோவிலுக்கு செல்ல சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் கீதாவிடம் முகவரி கேட்டனர். அவர் முகவரி சொல்வதற்காக திரும்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 7½ பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம ஆசாமி பறித்துக்கொண்டு இருவரும் தப்பி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா சம்பவ இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து கோபால் பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பல்லடம் பகுதியில் தொடர்ந்துநடைபெற்று வரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


Next Story