ஜன்னல் கம்பிகளை உடைத்து78 பவுன் நகைகள் கொள்ளை


ஜன்னல் கம்பிகளை உடைத்து78 பவுன் நகைகள் கொள்ளை
x
திருப்பூர்


உடுமலையில் ஜன்னல் கம்பிகளை உடைத்து தொழிலதிபரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 78 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழில் அதிபர்

உடுமலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரது மகன் லட்சுமி நாராயணசாமி (வயது 36). இவர் உடுமலை பெதப்பம்பட்டி பகுதியில் அட்டைப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடும்பத்துடன் கோவை சென்றார்.

நிகழ்ச்சி முடிந்து நேற்று முன் தினம் இரவு அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டு மாடியில் உள்ள படுக்கை அறையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

78 பவுன் நகை கொள்ளை

அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைரத்தோடு, தங்கக்காசு உள்பட 78 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. வீட்டின் முதல் மாடியில் உள்ள ஜன்னலில் 3 கம்பிகளை உடைத்து அகற்றிய மர்ம ஆசாமிகள் அதன் வழியாக வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது குறித்து லட்சுமி நாராயணசாமி அளித்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு ேமாப்ப நாய் விக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவிஜன்னல் கம்பிகளை உடைத்து

78 பவுன் நகைகள் கொள்ளைல்லை. உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.

கண்காணிப்பு கேமரா

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உடுமலை போலீசார் சுற்று வட்டாரப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? அதில் சந்தேகப்படும்படியான மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story