முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா: மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி கிழக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா: மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி கிழக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 31 May 2023 10:30 AM IST (Updated: 31 May 2023 10:34 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு தீர்மானங்கள் குறித்து பேசினார். கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசு மூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், பரிதாநவாப், தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர் நவாப் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி வழங்குவது. நூற்றாண்டு விழாவை கிழக்கு மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது. 3-ந்தேதி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, தி.மு.க. கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவது. இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி, இளைஞர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story