விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா


விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  பொன்விழா
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 3 நாட்கள் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் கே. வி. ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இயக்குனர் டாக்டர் குழந்தைவேலு, செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனர் பிரவீன் வசந்த், மயிலாடுதுறை குட் சமாரிட்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர் சிங் வரவேற்றார். விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ரேணுகா, சிவதாஸ், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் விசாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியின் இயக்குனர்கள் அனுஷா மேரி பிரவீன், ரீனிஷா அலெக்சாண்டர், பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை போல் குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இதில் ஹாரிஸ் குரூப் ஆப் கம்பெனி மேனேஜிங் டைரக்டர் ஆதவ் அர்ஜுன், ராஜீவ்காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் அனுப் மண்டல் ஆகியோர் கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.


Next Story