தமிழக பெண் போலீசாரின் பொன் விழா கொண்டாட்டம்

தமிழக பெண் போலீசாரின் பொன் விழா கொண்டாட்டம்
x

ராணிப்பேட்டையில் தமிழக பெண் போலீசாரின் பொன் விழா கொண்டாட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் தமிழக பெண் போலீசாரின் பொன் விழா கொண்டாட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணியில் சேர்ந்து 50-ம் ஆண்டு தொடக்க பொன் விழாவை முன்னிட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர்களை அழைத்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்), முத்துகருப்பன் (இணையவழி குற்றப்பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story