ஸ்கூட்டரில் சென்ற அரசுப்பள்ளிஆசிரியையிடம் 4¾ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


ஸ்கூட்டரில் சென்ற அரசுப்பள்ளிஆசிரியையிடம் 4¾ பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
x
திருப்பூர்


முத்தூர் அருகே ஸ்கூட்டரில் சென்ற அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 4¾ பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அரசுப்பள்ளி ஆசிரியை

திருப்பூர் மாவட்டம் முத்தூர், பெருமாள்புதூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜீவா (வயது 43). இவர் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு காலையில் ஸ்கூட்டரில் சென்று விட்டு பின்னர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் ஆசிரியை .ஜீவா நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் பள்ளி முடிந்ததும் மாலை 4.30 மணிக்கு ஸ்கூட்டரில் வீட்டிற்கு புறப்பட்டார். திருப்பூர் மாவட்டம் முத்தூர் - ஈரோடு சாலை மு.வேலாயுதம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் திடீரென்று ஜீவா கழுத்தில் அணிந்து இருந்த 4¾ பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு அவரை ஸ்கூட்டரில் இருந்து கீழே தள்ளி விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். கீழே விழுந்த ஜீவாவுக்கு காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாஸ்கூட்டரில் சென்ற அரசுப்பள்ளி

ஆசிரியையிடம் 4¾ பவுன் தாலிச்சங்கிலி பறிப்புஸ்கூட்டரில் சென்ற அரசுப்பள்ளி

ஆசிரியையிடம் 4¾ பவுன் தாலிச்சங்கிலி பறிப்புரணை

இது பற்றி தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து ஆசிரியை ஜீவாவை மீட்டு முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆசிரியை ஜீவா மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியையிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முத்தூர், மு.வேலாயுதம்பாளையம், சின்னமுத்தூர், தண்ணீர்பந்தல் ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வழிப்பறி கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதியில் சமீப காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எனவே வழிப்பறிக்கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


Next Story