கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் குடமுழுக்கு
வானாதிராஜபுரம் கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் குடமுழுக்கு
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் வானாதிராஜபுரம் கோபாலகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் நடந்தது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், வாஸ்து சாந்தி ஹோமம், மகா சாந்தி ஹோமம், உற்சவர் திருமஞ்சனம், திருவாராதனை, சாற்றுமுறை, கோபூஜை, அஜஸ்ர தீபபூஜை உள்ளிட்டவை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை புனித நீர் அடங்கிய கடங்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் உற்சவர் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலா தேவி, வானாதிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரிதமிழரசன் தலைமையில்,விழா குழுவினர், கிராமமக்கள் செய்து இருந்தனர்.