அரசு பஸ் கண்டக்டர் பலி
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார். இதுதெடர்பாக விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார். இதுதெடர்பாக விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
அரசு பஸ் மோதியது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். (வயது40). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.இந்த நிலையில் மணிவண்ணன் நேற்று மதியம் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆத்துக்குடி அருகே சென்ற போது எதிரே வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் மணிவண்னன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்த குருசாமி(59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.