சமயநல்லூர் அருகே கார் மோதி அரசு பஸ் டிரைவர் பலி
சமயநல்லூர் அருகே கார் மோதி அரசு பஸ் டிரைவர் பலியானார்
மதுரை
வாடிப்பட்டி
சமயநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் குலோத்துங்கன் (வயது 59). இவர் சோழவந்தான் கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சமயநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ெரயில்வே பாலம் முன்பாக வந்தபோது அவ்வழியாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த குலோத்துங்கன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story