கலெக்டர் அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திடீர் போராட்டம்


கலெக்டர் அலுவலகத்தில்  அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திடீர் போராட்டம்
x

கலெக்டர் அலுவலகத்தில் அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவன சேவைகளில் ஏற்பட்ட பாதிப்பை உடனடியாக சரிசெய்ய கோரி திடீரென அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக அருள் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டார்.

இதுகுறித்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூறும் போது, தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகள் தடை செய்யப்பட்டதால் கடந்த 3 நாட்களாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். 20-ந் தேதி மாலைக்குள் சரிசெய்யப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை சரிசெய்யப்படவில்லை. எனவே முதல்-அமைச்சர் தலையீட்டு இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து அவர்களிடம் அரசு கேபிள் டி.வி. தாசில்தார் பெலிக்ஸ் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் உங்களுடைய கோரிக்கை மனு தொடர்பாக தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார். இதையடுத்து அங்கிருந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலைந்து சென்றனர்.


Next Story