அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்


அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசாணைகளை ரத்து செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை, நவ.10-

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்களாக 53 பேர் மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழக அரசின் புதிய அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தி கல்லூரியின் முன்பு வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு கல்லூரிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்காத அரசாணை 246, 247 மற்றும் 248 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசாணை எண் 56-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story