போதிய பேராசிரியர்களை நியமிக்கக் கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா


போதிய பேராசிரியர்களை நியமிக்கக் கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா
x

போதிய பேராசிரியர்களை நியமிக்கக் கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கரூர்

கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் வேதியியல் துறையில் போதிய பேராசிரியர்கள் நியமிக்கவில்லை. இதனால் பாடங்களை நடத்தாமல் தேங்கி உள்ளன. 15 பேராசிரியர்கள் இருக்கும் இத்துறையில் 5 பேராசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இதனால் உடனடியாக உரிய முறையில் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை கல்லூரிக்கு வந்த வேதியியல் துறையை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி முதல்வர் கவுசல்யாதேவி மற்றும் பேராசிரியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பேராசிரியர்களை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாணவ-மாணவிகள் தர்ணாவை கைவிட்டு தங்களது வகுப்புகளுக்கு சென்றனர். இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story