அரசு ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை


அரசு ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை
x

அஞ்சுகிராமம் அருகே அரசு ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமம் அருகே அரசு ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிபோலீஸ் தரப்பில் கூறியதாவது:-

அரசு ஒப்பந்ததாரர்

அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது41), அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

பிரேம்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், தற்போது தொழில் சரிவர நடைபெறாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் ஆதலவிளை மலையடிவாரத்தில் உள்ள ஒரு ஆலமரத்து அடியில் பிரேம்குமார் இறந்து கிடந்தார். அவர் ஏதோ விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story