பணிமனை அமைக்க அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் வேண்டுகோள்


பணிமனை அமைக்க அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் வேண்டுகோள்
x

பணிமனை அமைக்க அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் வாசுதேவன், பொருளாளர் மார்கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓட்டுநர்களின் தர ஊதிய முரண்பாடு, கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பதவி உயர்வு, அனைத்து அரசுத்துறைகளிலும் கழிவு செய்யப்பட்ட ஊர்திகளுக்கு பதிலாக புதிதாக ஊர்திகள் வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்துக்கு பணிமனை உருவாக்க வேண்டும். சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனை பட்டா விரைந்து வழங்க கோரி ஆங்கில புத்தாண்டில் கலெக்டரை சந்தித்து மீண்டும் கோரிக்கை வைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


Next Story