அரசு டாக்டர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
அரசு டாக்டர் வீட்டில் 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
திருச்சி
திருச்சி:
நகைகள் திருட்டு
திருச்சி உறையூர் ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார்(வயது 48). இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 11-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு பெரம்பலூருக்கு சென்று இருந்தார்.
பின்னர் மீண்டும் 12-ந் தேதி அவர் வீடு திரும்பியபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தன.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story