நாமக்கல் மாவட்டத்தில் அரசு வாகன டிரைவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்

நாமக்கல் மாவட்டத்தில்  அரசு வாகன டிரைவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்
x

நாமக்கல் மாவட்டத்தில் அரசு வாகன டிரைவர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்

நாமக்கல்

நாமக்கல்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். டிரைவர்களின் தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். அரசு வாகன டிரைவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வழங்க வேண்டும். டிரைவர் காலிபணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்கிற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் சங்க தலைவர் வெங்கடேஸ்வரன், செயலாளர் செந்தில், பொருளாளர் யோகராஜ் உள்பட 140 அரசு வாகன டிரைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Next Story