அரசு ஊழியர்கள் பிரசாரம்
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிரசாரம் மேற்கொண்டனா்.
விழுப்புரம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. இப்பிரசார கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சு.சிவக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சி.சிவக்குமார், தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் காந்திமதி, தமிழ்நாடு நிலஅளவை ஒன்றிப்பு அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அஜீஸ், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கிருபாகரன், வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில செயலாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், உறுதியளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிவரன்முறை செய்து ஊதிய இழப்பை வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பிரசாரம் நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர் ஆதிசங்கரன், விழுப்புரம் வட்ட தலைவர் கோவிந்தராஜ், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் தேசிங்கு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் சாருமதி நன்றி கூறினார்.