Normal
அரசு ஊழியர்கள் தர்ணா
திண்டுக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மாநில துணை பொதுச்செயலாளர் மங்களபாண்டியன் கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டு, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டுவிட்டன. அவற்றை திரும்ப வழங்க வேண்டும். மத்திய-மாநில அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் குப்புசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story