அரசு ஊழியர்கள் தர்ணா


அரசு ஊழியர்கள் தர்ணா
x

சிவகாசியில் அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பால்முருகன் தலைமை தாங்கினார். சிவகாசி கிளை செய லாளர் மணிமாலா பாண்டியன் வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தேவா தொடக்கவுரையாற்றினார். கருப்பையா கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ராமச்சந்திரன், கருமலை, முத்து வெள்ளையப்பன், ராஜகுரு, தமிழ் செல்வி, முருகானந்தம், குருசாமி, ஜேசுடெல்குயின், ஞானத் தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருமூர்த்தி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story