கொட்டும் மழையில் அரசு ஊழியர்கள் தர்ணா


கொட்டும் மழையில் அரசு ஊழியர்கள் தர்ணா
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொட்டும் மழையில் அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்துவதற்கு, திண்டுக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது சாரல் மழை பெய்யத் தொடங்கியது. எனினும் அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் நனைந்தபடி அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் முபாரக்அலி தலைமை தாங்கினார். செயலாளர் விவேகானந்தன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் மாநில துணை பொதுச்செயலாளர் மங்களபாண்டியன், மாவட்ட பொருளாளர் குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் 4½ லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் 3 சதவீத அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story