அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோத்தகிரி,
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை கேள்விக்குறியாக்கும் அரசாணை எண்152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோத்தகிரி வட்டார இணை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 7.7.2022-ந் தேதி முதல் 4 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. முடிவில் கோத்தகிரி வட்டார செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
இதேபோல் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சலீம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன் கோரிக்கை குறித்து விளக்கினார்