Normal
அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோவையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது
கோயம்புத்தூர்
கோவை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோவை சிவானந்தாகாலனியில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். கோரிக்கைகள் குறித்து செந்தில்குமார் பேசியதாவது:- அரசு துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.
Next Story