அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
விடுப்பு எடுத்து போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் பணியாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
இந்த போராட்டம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன. இந்த போராட்டம் குறித்து தெரியாமல் அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்கான வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு பணிகள் பாதிக்கப்பட்டன.