அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 முனை பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஜபருல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி, பொருளாளர் ரமா ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், உறுதியளித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிக்காலத்தை பணிவரன் முறை செய்து 41 மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில செயலாளர்கள் ஹேமலதா, அம்சராஜ், மாவட்ட நிர்வாகிகள் கருப்பையா, மனோகரன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story