புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது

கன்னியாகுமரி

நாகர்கோவில், மே.29-

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நாகர்கோவிலில் நடந்தது.

தர்ணா போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நேற்று நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, அனைத்து ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது வினியோக முறையை சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் விஜயகுமார், மூட்டா மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story