அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்


அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

நாகப்பட்டினம்


நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம், நாகை அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நடந்துள்ள வேலைகள் குறித்தும், எதிர்கால இயக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். நாகை மற்றும் கீழ்வேளூர் வட்ட செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் வட்ட மையம் சார்பில் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் மாநில செயலாளர் டானியல் ஜெயசிங் பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய முரண்பாடுகளை கலைதல், தொகுப்பூதியம், மதிப்பூதியம், ஒப்பந்த நியமனம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து முறையான ஊதிய விகிதம் வழங்குதல். காலிப்பணியிடங்களை முறையான ஊதிய விகிதத்தில் நிரப்புதல். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட தலைநகரில், நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை ஊர்வலம் நடத்துவது. ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பங்கேற்க வைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல் நன்றி கூறினார்.


Next Story